

மத்தூர்
ராகுல்காந்தி எம்.பி. தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போச்சம்பள்ளியில் ராஜீவ்காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் மனோகரன், மாவட்ட துணைத்தலைவர் சாந்தசீலன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், கோவிந்தன், சத்தியசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது திடீரென நான்கு சந்திப்பு சாலையில் காங்கிரசார் சாலை மறியில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.