முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Published on

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் திருச்சி, பாலக்கரையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லா மகது தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஷேக்அப்துல்லா முன்னிலை வகித்தார். மாநில தலைவர் காஜாமுகைதீன், மாநில பொதுச் செயலாளர் ஜாவித்உசேன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது அமைதி நிலவ வழிவகை செய்யக்கோரியும், வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com