காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

களக்காட்டில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

களக்காடு:

ராகுல் காந்தியை ராவணன் போல் சித்தரித்து பா.ஜ.க.வினர் படம் வெளியிட்டுள்ளனர். இதனை கண்டித்து களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் பா.ஜ.க.வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், களக்காடு வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு விழா, களக்காடு அருணா மஹாலில் நடைபெற்றது. ரூபி ஆர்.மனோகரன் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, காங்கிரஸ் நிர்வாகிகள் அழகியநம்பி, சந்திரசேகர், ஜார்ஜ் வில்சன், அலெக்ஸ், தி.மு.க. நகர செயலாளர் மணிசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com