கூட்டுறவு ஊழியர் சங்கத்தினா ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினா ஆர்ப்பாட்டம்
Published on

திருவாரூர்;

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கால அவகாசம் இல்லாமல் புள்ளிவிவரங்கள் கோருதல் என்ற பெயரில் மன அழுத்தம் நிறைந்த பணிச்சூழல், தினசரி காணொலி ஆய்வு கூட்டங்கள், விடுமுறை நாட்களில் கூட ஓய்வு இல்லாமை வாட்ஸ் அப் செயலி மூலம் கடித போக்குவரத்து மற்றும் நிர்வாகம் நடத்துதல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அனைத்து பணி நிலை பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு அரசு கூட்டுறவு ஊழயர் சங்கத்தின் சார்பில் ஆர்;ப்பாட்டம் நடந்து.ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் விஜயன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர்; மணிவண்ணன், நெடுஞ்சாலைதுறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், வேளாண்மைதுறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தம்பிதுரை, வருவாய்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com