

தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தே.மு.தி.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனே வழங்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். என்.எல்.சி. நிர்வாகம் விளைநிலங்களில் உள்ள பயிர்களை அழிப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கர், வடக்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.