நாமக்கல்லில்தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில்தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழகம் முழுவதும் நேற்று தே.மு.தி.க.வினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய்சரவணன், தெற்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். நாமக்கல் நகர செயலாளர் தனபால் வரவேற்று பேசினார். இதில் மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க கோரியும், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், கனிம வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் சக்திவேல், பாலசந்தர், தனலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் செல்வி, விஜயன், ராமு, பரத், சுந்தர் ஆனந்த் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com