விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதியில் கடந்த ஆண்டு சரியான மழைப்பொழிவு இல்லாததால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கருகி நாசமானது. கடற்கரை சாலையை ஒட்டி உள்ள கிராமங்களான கட்டுமாவடியில் இருந்து அரசநகரி பட்டினம் வரை உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு உழுது, விதை விதைத்து, களை எடுத்து, உரம் இட்டும் கதிர் வருகின்ற தருவாயில் கருகி நாசமானது. ஆனால் இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து மீமிசல் கடை வீதியில் விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் அறந்தாங்கி பொறுப்பாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மீமிசல் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு நிவாரணம் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com