அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து ஒப்பந்த மற்றும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், அரசு துறைகளில் இருக்கும் 5 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மாடசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் துரைசிங் உள்பட பலர் பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் வேல்ராஜன் நன்றி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com