சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டி.என்.டி. (பழங்குடி சீர்மரபினர்) என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும். டி.என்.டி. இடஒதுக்கீடு வரிசையில் இல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சட்டவிரோதமாக டி.என்.டி. சான்றிதழ் கொடுப்பதை கண்டிப்பது.

அரசு கள்ளர் பள்ளிகளை தரம் உயர்த்தி அங்கு கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ஜெயபால், மகளிரணி தலைவி விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கம்யூனிஸ்டு கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சின்னமனூர் நகர பொறுப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சின்னமனூர் எள்ளுக்கட்டை தெருவில் மாணவ, மாணவிகள், பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், தர்மர் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.

அதுபோல், டி.வாடிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழ்ப்புலிகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு துணை செயலாளர் தமிழரசி, மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர் பாலா, மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com