கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆலங்குளத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஆலங்குளம்:

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்து, கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரிகளை திரும்ப பெற வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்களை ரேஷன் கடைகளின் மூலம் குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசீலன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமசிவன், தாலுகா செயலாளர் பாலு, துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட குழு உறுப்பினர் கனகராஜ், தாலுகா குழு உறுப்பினர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com