கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பனந்தாள் அருகே குடிமனை பட்டா வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

திருப்பனந்தாள் அருகே மானம்பாடியில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர் உத்திராபதி, முற்போக்கு பெண்கள் கழகத்தை சேர்ந்த அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் மாசிலாமணி பேசுகையில், மானம்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் வசிக்கும் ஏழை-எளிய மக்கள் 10 ஆண்டுகளாக குடிமனை பட்டா கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இன்று வரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு காலதாமதமின்றி பட்டா வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதில், அனைத்து கிராம விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் குணசேகரன் உள்பட கம்யூனிஸ்டு கட்சியினர், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com