கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சங்ககிரி:-

சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்ட துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். சங்ககிரி கோட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்ககிரி வட்ட கிளை தலைவர் மணி, செயலாளர் மோகன், எடப்பாடி வட்ட கிளை தலைவர் அப்புசாமி, செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com