

கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், பழனி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் பழனி வட்டக்கிளை தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.