

சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடைமைகளை அவரது வாரிசுகளிடம் ஒப்படைக்க வலியுறுத்தி அம்மா தொண்டர் இயக்க தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டன் சுப்பிரமணி கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டையும், தனிப்பட்ட உடைமைகளையும் அவரது வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அந்த இல்லத்தில தொண்டர்களை பார்வையிட அனுமதிப்பார்கள்.
ஜெயலலிதா இறந்த போது, அவரது உடல் மீது போர்த்தப்பட்ட தேசிய கொடியை அவரது வாரிசுகளிடம் வழங்காததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.