பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பாக பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்
Published on

செய்யாறு

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகிகள் வெங்கடேசன், தனசேகரன், முத்துசாமி, சரவணன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நகர தலைவர் லட்சுமணன் வரவேற்றார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு மின்சார உயர்வு உட்பட தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பெருமாள், முனுசாமி, சரவணன், நரசிம்மசாமி, வரதராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.

முன்னதாக உதவி கலெக்டர் அலுவலகம் அருகே மேடை அமைத்து பேசிக்கொண்டிருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் திடீரென ஊர்வலமாக செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பாக சென்றனர்.

பா.ஜ.க. நிர்வாகிகள் உதவி கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்றுவிட கூடாது என்கிற வகையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அலுவலகத்தை பூட்டினர்.

அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் அலுவலகம் முன்பாக நின்று கண்டன போராட்டத்தினை நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com