மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
Published on

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் போரை கண்டித்தும் நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு கண்டன உரையாற்றினார். இதில் செயற்குழு உறுப்பினர் ராஜாமுகமது, மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், தர்மலிங்கம், ராஜேந்திரன், ஹோச்சுமின் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com