டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

விக்கிரமசிங்கபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கோரியும், அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விக்கிரமசிங்கபுரம் மார்க்சிஸ்ட் கட்சி நகர குழு செயலாளர் இசக்கி ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதில் கட்சியின் நகர குழு உறுப்பினர்கள் முருகன், பேராசிரியர் சுப்பாராஜ், பாலு, அகஸ்தியராஜன், மாற்றுத்திறனாளி சங்கத்தினர்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com