பேரிடர் மீட்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம்

கூடலூர் அரசு பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
பேரிடர் மீட்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம்
Published on

கூடலூர்

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விபத்து மற்றும் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டு பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது, தீயணைப்பு கருவியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் விளக்கினர்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com