நெல்லை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பதவி இறக்கம்; 11 பேருக்கு பதவி உயர்வு

நெல்லை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் துணை தாசில்தாராக பதவி இறக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 11 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பதவி இறக்கம்; 11 பேருக்கு பதவி உயர்வு
Published on

நெல்லை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் துணை தாசில்தாராக பதவி இறக்கம் செய்யப்பட்ட நிலையில் 11 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

பதவி இறக்கம்

நெல்லை மாவட்ட முத்திரைத்தாள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தனித்தாசில்தாராக இருந்த ரகுமத்துல்லா, பதவி இறக்கம் செய்யப்பட்டு நெல்லை மாநகராட்சி தேர்தல் துணை தாசில்தாராகவும், நெல்லை மாவட்ட முத்திரைத்தாள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தனித்தாசில்தாராக இருந்த ஏசுராஜன், பதவி இறக்கம் செய்யப்பட்டு சென்னை-கன்னியாகுமரி தொழில் தடத்திட்ட நிலஎடுப்பு துணை தாசில்தாராகவும், சிப்காட் நில எடுப்பு தனித்தாசில்தார் சண்முகசுப்பிரமணியம் பதவி இறக்கம் செய்யப்பட்டு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட துணை தாசில்தாராகவும், சிப்காட் நில எடுப்பு தனித்தாசில்தார் முருகேசுவரி பதவி இறக்கம் செய்யப்பட்டு வருவாய் நீதிமன்ற உதவி கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை தாசில்தார் மாணிக்கவாசகம் பதவி இறக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் அலுவலக கண்காணிப்பாளராகவும், தேர்தல் தனித்தாசில்தார் கந்தப்பன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு

பாளையங்கோட்டை துணை தாசில்தார் வைகுண்டம் பதவி உயர்வு பெற்று நெல்லை தாசில்தாராகவும், ராதாபுரம் துணை தாசில்தார் சுப்புலட்சுமி பதவி உயர்வு பெற்று கலால் உதவி ஆணையாளர் அலுவலக கலால் மேற்பார்வையாளராகவும், அம்பை துணை தாசில்தார் சரவணன் பதவி உயர்வு பெற்று சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளர் ரமேஷ் பதவி உயர்வு பெற்று சேரன்மாதேவி கோட்ட கலால் அலுவலராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் விஜய்ஆனந்த் பதவி உயர்வு பெற்று நாங்குநேரி தாசில்தாராகவும், ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் பார்வதி பதவி உயர்வு பெற்று முத்திரை உதவி கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராகவும், நாங்குநேரி துணை தாசில்தார் முருகன் பதவி உயர்வு பெற்று திசையன்விளை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டனர்.

கனிமம் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் அலுவலக துணைத்தாசில்தார் பாலகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று தேர்தல் தாசில்தாராகவும், சேரன்மாதேவி துணை தாசில்தார் சுமதி பதவி உயர்வு பெற்று அம்பை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக இ பிரிவு தலைமை உதவியாளர் ஜெயலட்சுமி பதவி உயர்வு பெற்று அம்பை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ரதிதேவி, பதவி உயர்வு பெற்று சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இடமாற்றம்

அம்பை தாசில்தார் விஜயா சேரன்மாதேவி தாசில்தாராகவும், சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் கலெக்டர் அலுவலக குற்றவியல் மேலாளராகவும், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி நெல்லை கோட்ட கலால் அலுவலராகவும், திசையன்விளை தாசில்தார் ராஜேந்திரன் சிப்காட் நில எடுப்பு தனித்தாசில்தாராகவும், டாஸ்மாக் உதவி மேலாளர் மோகன் முத்திரைத்தாள் தனித்தாசில்தாராகவும், நெல்லை சிப்காட் நிலஎடுப்பு தனி தாசில்தார் சந்திரன், சிங்கம்பட்டி வனநிலவரி திட்ட நில எடுப்பு தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கலெக்டர் அலுவலக இ பிரிவு தலைமை உதவியாளர் இசைவாணி கே பிரிவு தலைமை உதவியாளராகவும், அம்பை துணை தாசில்தார் ராஜதுரை அம்பை தேர்தல் துணை தாசில்தாராகவும், பாளையங்கோட்டை கூடுதல் துணை தாசில்தார் மீனா, மண்டல துணை தாசில்தாராகவும், ராதாபுரம் தலைமையிடத்து துணை தாசில்தார் பேட்ரிக்சிலுவை அந்தோணி, ராதாபுரம் தேர்தல் துணை தாசில்தாரகவும் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டனர்.

அம்பை தலைமையிடத்து துணை தாசில்தார் செல்லத்துரை, கூடுதல் துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் பாலசாந்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும், நாங்குநேரி தேர்தல் துணை தாசில்தார் வசந்தி நாங்குநேரி மண்டல துணை தாசில்தாராகவும், சேரன்மாதேவி தலைமையிடத்து துணை தாசில்தார் மாரிசெல்வம் தேர்தல் துணை தாசில்தாராகவும் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட வழங்கல் அலுவலக தலைமை உதவியாளர் மீராதேவி, கலெக்டர் அலுவலக டி பிரிவு தலைமை உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com