டெங்கு தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 35 ஆயிரம் கிலோ தேவையற்ற பொருட்கள் அகற்றம்

சென்னையில் கடந்த 10 நாட்களில் 1,010 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
டெங்கு தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 35 ஆயிரம் கிலோ தேவையற்ற பொருட்கள் அகற்றம்
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

சென்னையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 3,703 பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள டயர், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அகற்றுகிறார்கள். கடந்த 1-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 8,373 கிலோ பயன்படுத்தப்பட்ட டயர்கள் மற்றும் 35,056 கிலோ தேவையற்ற பயன்படுத்தப்படாத பொருட்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

இதேபோல, கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட கட்டுமானப் பகுதிகள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளின் உரிமையாளர்களுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் கடந்த 24-ந்தேதி வரை ரூ.37,05,500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மட்டும் ரூ.11,44,100 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

வீடுகள், கட்டுமான நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்காமல் பொதுமக்கள் உடனுக்குடன் அகற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 10 நாட்களில் 1,010 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 34,251 பேர் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com