கடும் பனி மூட்டம்... சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

10 விமானங்களின் புறப்பாடு தாமதம் ஆகி உள்ளதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடும் பனி மூட்டம் காரணமாக சென்னை வர வேண்டிய மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் உள்ளிட்ட 5 வருகை விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அதேபோல, சென்னையில் இருந்து செல்லும் சுமார் 10 விமானங்களின் புறப்பாடும் தாமதம் ஆகி உள்ளதால் பயணிகள் அவதி அடைந்தனர். அதேபோல, திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com