சென்னையில் கடும் பனிமூட்டம்: புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்

மூடுபனி காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
 சென்னையில் கடும் பனிமூட்டம்: புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்
Published on

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. அதிகாலையில் நிலவிய பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது. பனிமூட்டம் காரணமாக சாலைகள் சரியாக புலப்படாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர். புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன

திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து வரும் ரயில்களும் தாமதமாக வந்தன

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்னும் இரண்டு நாட்களுக்கு பனிமூட்டம் அதிகமாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னைக்கு வர இருந்த 7 விமானங்கள் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. காற்றில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மிதமான காற்றோட்டமே இந்த பனிமூட்டத்திற்கு காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com