சென்னையில் கடும் பனிமூட்டம்: புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்

கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் சென்னை புறநகர் மின்சார ரெயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
சென்னையில் கடும் பனிமூட்டம்: புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்
Published on

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரையில் நீடித்து வரும் நிலையில் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்றும் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. வழக்கத்தை விட கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிக அளவில் நிலவுவதால் புறநகர் மின்சார ரெயில்கள் சுமார் 10 முதல் 25 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.

திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரக்கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்லும் மக்கள் சிரமத்தை எதிர்கெண்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com