தென் மாவட்ட ரெயில்கள் புறப்படும் நேரம் 1-ந்தேதி முதல் மாற்றம்


தென் மாவட்ட ரெயில்கள் புறப்படும் நேரம் 1-ந்தேதி முதல் மாற்றம்
x
தினத்தந்தி 26 Dec 2025 8:25 AM IST (Updated: 26 Dec 2025 9:35 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு முதல், தென் மாவட்டங்களில் இருந்து எழும்பூர் செல்லும் நெல்லை, பொதிகை மற்றும் முத்துநகர் ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட உள்ளது

நெல்லை,

தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, நெல்லை, பொதிகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். இந்த ரெயில்கள் புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

நெல்லை எக்ஸ்பிரஸ்;

நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12632) : நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், தற்போது இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 1-ம் தேதி (வியாழக்கிழமை) முதல், இந்த ரெயில் 10 நிமிடங்கள் தாமதமாக, அதாவது இரவு 8.50 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

பொதிகை எக்ஸ்பிரஸ்;

செங்கோட்டையில் இருந்து எழும்பூருக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12662) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில், செங்கோட்டையில் இருந்து தினமும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு எழும்பூரை வந்தடையும். புதிய மாற்றத்தின்படி, ஜனவரி 1 முதல் மாலை 6.50 மணிக்கு இந்த ரெயில் புறப்படும். பின்னர் மறுநாள் சென்னை எழும்பூரை வழக்கத்தை விட முன்னதாகவே, அதாவது காலை 5.55 மணிக்கே சென்றடையும் வகையில் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.

முத்துநகர் எக்ஸ்பிரஸ்;

தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12694) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில், தூத்துக்குடியில் இருந்து தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த நிலையில், வருகிற 1-ந்தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து இரவு 9.05 மணிக்கு ரெயில் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ்;

கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16102) : செங்கோட்டை மற்றும் தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் - தாம்பரம் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயிலின் வேகம் அதிகரித்து பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் தாம்பரம் ரெயில் நிலையத்தை காலை 6.05 மணிக்கு சென்றடையும்.

1 More update

Next Story