துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆலோசனை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்காக தங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று காலை 10.15 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்திற்கு பின் அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் நடத்திவரும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com