தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
Published on

சென்னை,

நிவர் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

நிவர் புயலின் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையிலும் இரவு பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com