

சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. தமிழக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்காக வருகிற 23ந் தேதி ஆஜராக ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோன்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 21ந் தேதியும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை 22ந் தேதியும் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.