துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்17-ல் வெளியாக உள்ளது.
துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.

இம்மாதம் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பிப்ரவரி இறுதியில் சட்டசபைக்கான தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் 11-ந்தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com