சென்னை வந்த துணை ஜனாதிபதி - உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு


சென்னை வந்த துணை ஜனாதிபதி -  உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு
x
தினத்தந்தி 2 Jan 2026 12:49 PM IST (Updated: 2 Jan 2026 12:51 PM IST)
t-max-icont-min-icon

லோக் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி நடத்தும் குடிமை வரவேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி கலந்து கொள்கிறார்.

சென்னை,

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து மற்றும் புத்தகம் ஒன்றையும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பரிசாக அளித்து வரவேற்றார்.

இதன்பிறகு அவர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். மாலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் பொது வரவேற்பு விழாவிலும், அதனைத்தொடர்ந்து லோக் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி நடத்தும் குடிமை வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

பின்னர் நாளை காலை அவர் வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார். அங்கு சக்தி அம்மாவின் 50-வது பொன்விழா ஜெயந்தியில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து பிற்பகலில் சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சித்தர் தின விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.

1 More update

Next Story