எம்.ஜி.ஆரின் சிலை அவமதிக்கப்பட்டிருக்கும் செயல் கண்டிக்கத்தக்கது - டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆரின் சிலையை அவமதிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் சிலை அவமதிக்கப்பட்டிருக்கும் செயல் கண்டிக்கத்தக்கது - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

எம்.ஜி.ஆரின் சிலையை அவமதிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதாகும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை அவமதிக்கப்பட்டிருக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.

எம்.ஜி.ஆரின் சிலையை அவமதிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களையும் அவமதிப்பதாகும். ஏழைகளின் காவலர் பொன்மனச்செம்மலின் சிலையை அவமதித்த நபர்களைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.

எம்.ஜி.ஆர் சிலையில் மர்ம நபர்கள் பூசிய பெயிண்ட்டை அகற்றி புதுப்பிக்கவும், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கவும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com