திருப்பூர் கல்லம்பாளையத்தில் தூர்வாரப்பட்ட கழிவுநீர் கால்வாய்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தபோது கழிவுநீரானது ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.
கழிவுநீர் கால்வாய்
Published on

திருப்பூர்,

திருப்பூர் கல்லம்பாளையம் ரெயில்வே தண்டவாள பகுதியில் உள்ள பாலத்தில் (ஒற்றைக்கண் பாலம்) கழிவுநீர் செல்ல தனியாக கால்வாய் உள்ளது. ஆனால் இந்த கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுகள் தேங்கியிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தபோது கழிவுநீரானது ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.

மக்கள் பாராட்டு

இதுதொடர்பாக ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தூய்மை பணியாளர்கள் அந்த கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரினார்கள். இதன் காரணமாக தற்போது கழிவுநீர் தடையின்றி கால்வாயில் செல்கிறது. இதனால் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com