கொண்டனூர் தடுப்பணையை தூர்வாரும் பணி; கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கொண்டனூர் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன.
கொண்டனூர் தடுப்பணையை தூர்வாரும் பணி; கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Published on: 

கோவை,

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெ.24 வீரபாண்டி ஊராட்சி ஆனைக்கட்டி அருகே கொண்டனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இங்கு ஒரு தடுப்பணை உள்ளது.

மழைக்காலத்தில் இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்படி தண்ணீர் தேங்கும்போது நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் அந்த கிராம மக்கள் பெரிதும் பயன்பெற்று வந்த னர். அத்துடன் விளைநிலங்களில் உள்ள கிணறுகள், ஆழ் துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகளுக்கும் பயன் கிடைத்தது.

இந்த தடுப்பணையை தூர்வார வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 12 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.வை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். உடனே அவரும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து கொண்டனூர் தடுப்பணையை தூர்வார முடிவு செய்யப்பட்டு அதற்கான தொடக்க நிகழ்ச்சி பூமி பூஜையுடன் தொடங்கியது. தூர்வாரும் பணியை கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த தடுப்பணையை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- தடுப்பணையில் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளதால், மழை பெய்யும்போது தண்ணீர் வீணாகாமல் சேமிக்கப்படும். இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன், விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகள், வனவிலங்குகளுக்கும் போதிய நீர் ஆதாரம் கிடைக்கும். எங்கள் கோரிக்கையை ஏற்று தடுப்பணையை தூர்வார நடவடிக்கை எடுத்த கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com