அதிக லாபத்துக்கு ஆசை...ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம் ரூ.17 லட்சம் மோசடி

குறிப்பிட்ட லிங்கை தொட்டுள்ள சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்தை மர்ம நபர்கள் சுருட்டியுள்ளனர்.
ஆன்லைன் மூலமாக மோசடிப் பேர்வழிகள் பல்வேறு வழிகளில் தினம் தோறும் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள், அந்த வகையில் சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கஜித் என்பவரின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் குறையான முதலீடு செய்து அதிக லாபம் பெற வேண்டுமா? கீழே கொடுக் கப்பட்டுள்ள லிங்கில் செல்லுங்கள்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை நம்பி கஜித் குறிப்பிட்ட லிங்கை தொட்டுள்ள சிறிது நேரத்தில் கஜித்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்து 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் சுருட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கஜித் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.17 லட்சம் பணத்தை சுருட்டிய மாம நபர்கள் யார்? என்பது பற்றிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் தான் சேத்துப்பட்டை சேர்ந்தவரிடம் ரூ.17 லட்சம் சுருட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.






