அதிமுக ஆட்சியில் நிதி நிலை சீர்கேடு என்பது தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் இருந்தது என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் நிதி நிலை சீர்கேடு என்பது தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
Published on

சேலம்,

தமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்படுகிறது. அறிக்கையில், அ.தி.மு.க., அரசு விட்டுச் சென்றுள்ள கடன் சுமை குறித்த விபரங்கள் முழுமையாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வரவு செலவு தெரிவிக்கப்படும். கடன் சுமை அதிகரித்த போதும் அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2011-ல் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது கடன் சுமை இருந்தது. அதிமுக ஆட்சியில் இருந்த கடன்கள் திமுக ஆட்சியிலும் இருந்தவைதான். அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கிதான் இயங்கி வருகிறது. 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் இருந்தது

நீட் தேர்வை ரத்து செய்ய திமுக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பெட்ரொல், டீசல் விலை குறைக்க என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது? 100- நாட்களில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com