1600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
1600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் உள்ள தாழ்தொரடிப்பட்டு கல்லாறு ஆற்றின் தெற்கே உள்ள மூங்கில்காட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்ப்பிரண்டு மோகன்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், மேற்கண்ட பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 8 பிளாஸ்டிக் பேரல்களில் மொத்தம் 1.600 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து சாராய ஊறலை பதப்படுத்தி வைத்திருந்தது யார்? என்பது பற்றி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com