600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கோவில்மொழிப்பட்டு வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து சாராய ஊறலை பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக வெங்கட்ராமன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com