கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.
கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

கல்வராயன்மலையில் உள்ள பெருமாநத்தம், தேர்புளி கிராம வனப்பகுதிகளில் சமூக விரோதிகள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி, ஜெயலட்சுமி மற்றும் கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் டிரோன் கேமரா மூலம் பெருமாநத்தம், தேர்புளி வனப்பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதிகளில் செல்லும் நீரோடைகளின் அருகே 3 பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், பேரல்களில் இருந்த சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு சாராயம் காய்ச்சிய நபர்கள் யார்? என விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே குரும்பாலூர் ஓடை அருகே சாராயத்தை லாரி டியூப்பில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அதேஊரை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வமணி (வயது 24), ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் குமார் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com