800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 800 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை வண்டைக்காப்பாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக ஊரல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வண்டைக்காப்பாடி வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 200 லிட்டர் கொள்ளளவுள்ள 4 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊரல் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறாகள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com