கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பற்றி சென்னை உயர்நீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது, பரிசோதனைகளை போதுமான அளவில் நடத்தப்படவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்.

கொரோனாவால் இறந்தவர் உடல்களை தடுப்பு விதிகளை முறையாப் பின்பற்றி அகற்ற வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் தகனம் செய்ய வேண்டும்.

இதைத்தொடர்ந்து, குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பது பற்றிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றலாம் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தனர். மேலும், கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மையான விவரங்களை வெளியிட வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com