கரூரில் 31 பேருக்கு வழங்கப்பட்ட பணிகள் விவரம்

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களில் 31 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.
கரூரில் 31 பேருக்கு வழங்கப்பட்ட பணிகள் விவரம்
Published on

கரூர்,

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்துபோனார்கள். இவர்களது குடும்பத்தினர்களில் 31 பேருக்கு அரசுப் பணியும், ஒருவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கமும் வழங்கும் நிகழ்வு கரூரில் இன்று நடைபெற்றது.

இதில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன்படி, க.சாந்திக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. 31 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அவர்களது பெயர் மற்றும் நியமனம் செய்யப்படும் துறை விவரம் வருமாறு:-

ஆனந்த ஜோதி - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), மா.நிவேதா - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), சு.கலைச் செல்வி - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு), செ.சதீஸ் குமார் - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு), வெ.விமல் - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு).

வை.சங்கவி - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), பா.ரகுநாதன் - இரவு காவலர் (மாவட்ட வருவாய் அலகு), பெ.செல்வராணி - மசால்ஜி (மாவட்ட வருவாய் அலகு), ச.திவ்யா - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), ந.கிருஷ்ணமூர்த்தி - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), மோனிஷா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை).

ப.சந்திரகலா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை), ச.மகாலட்சுமி - இளநிலை உதவியாளர் (காவல் துறை), பா.தனலட்சுமி - இளநிலை உதவியாளர் (காவல் துறை), சு.முருகன் - அலுவலக உதவியாளர் (கரூர் மாவட்ட அலகு), செ.பிரபாகரன் - இளநிலை உதவியாளர் (பதிவுத்துறை), ம.ஷர்மிளா - இளநிலை உதவியாளர் (பதிவுத்துறை), ச.சந்தியா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை).

அஷ்வின் குமரன் - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), ச.சுதன் - அலுவலக உதவியாளர் (கரூர் மாவட்ட அலகு), அகிலா - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு), குணசேகர் - இளநிலை உதவியாளர் (பேரூராட்சிகள் துறை), ஜெயபிரகாஷ் - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சித் துறை), நிவேதிதா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), தீபலட்சுமி - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை).

மல்லிகா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), பிரபாகரன் - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), ஜோதி - இரவு காவலர் (பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி), ம.பிரியதர்ஷினி - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஊராட்சித் துறை), க.சக்திவேல் - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), ந.யோகேஷ்குமார் - இரவு காவலர் (மாவட்ட வருவாய் அலகு).

X

Daily Thanthi
www.dailythanthi.com