

சென்னை,
அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, 17.3.2026 செவ்வாய்க் கிழமையன்று வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு, கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு தலைமையேற்பார்கள்.
ஏனைய வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும்; தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் தலைமையேற்பார்கள்.
ஆகவே, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், திமுக அரசைக் கண்டித்து, வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.