தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடியின் பயண திட்ட விவரம் வெளியீடு

மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.
 தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடியின் பயண திட்ட விவரம் வெளியீடு
Published on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,வரும் மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரவுள்ளார். மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். கடந்த முறை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தார்.

அதனை தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். பிரதமர் மோடி பயண திட்டத்தின் விவரம் வெளியகியுள்ளது. இதன்படி வரும் 28 ஆம் தேதி இரவு விமானம் மூலம் தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னையில் தங்குகிறார். சென்னையில் இருந்து மார்ச் 1 ல் புதுவை சென்று அரசு விழாவில் பங்கேற்கிறார். புதுவையில் இருந்து பிற்பகல் 1 மணியளவில் கிளம்பும் மோடி, தஞ்சை செல்கிறார். பின்னர் அங்கிருந்து மதுரை செல்ல உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com