சென்னையில் அன்னதானம் வழங்கப்படும் கோவில்கள் விவரம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னையில் இந்த மாதம் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் கோவில்களின் விவரங்கள்.
சென்னையில் அன்னதானம் வழங்கப்படும் கோவில்கள் விவரம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், "வள்ளலார் 200" இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வினையும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சென்னையில் முதல் ஒரு மாத காலத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும் நாள் மற்றும் இடங்களின் பட்டியல் வருமாறு:-

நேற்று முதல் நாளை (8-ந்தேதி) வரை-வசந்த மண்டப அறக்கட்டளை, எண்.90, நைனியப்பநாயக்கன் தெரு, சென்னை (கந்தக்கோட்டம் முத்துக்குமாரசுவாமி கோவில் அருகில்)

வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை-மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோவில்.

12-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை- வாசவி மகால், கிருஷ்ணப்ப அக்ரஹாரம் தெரு, ஜார்ஜ் டவுன். 15-ந்தேதி முதல் 17-ந் தேதி வரை-குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்ட வாசப் பெருமாள் கோவில், கோயம்பேடு.

18-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை-பட்டினத்தார் கோவில் மண்டபம், திருவொற்றியூர். 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை-காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை. 24-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை- சீனிவாச பெருமாள் கோவில் மண்டபம், சூளை.

27-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை-சக்தி விநாயகர் கோவில், கே.கே.நகர். 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி வரை- சீயாத்தம்மன் கோவில் மண்டபம் கொரட்டூர்.

நவம்பர் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை-பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் திருமண மண்டபம், கோட்டூர்புரம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com