தேவர் ஜெயந்தி விழா: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை..!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.
தேவர் ஜெயந்தி விழா: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை..!
Published on

மதுரை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

இந்த நிலையில், தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி , ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com