தேவாவின் இசை பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் - அண்ணாமலை

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அண்ணாமலை
Published on: 

சென்னை,

பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமான செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இரங்கல்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், சுமார் நாற்பது ஆண்டுகளாக தனது இசையாலும், குரலாலும் மக்களின் அன்பைப் பெற்று, தேனிசை தென்றல் என்ற புகழ் பெற்றவருமான, தேவா காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தனது தனித்துவமான இசையாலும், எண்ணற்ற இனிமையான பாடல்களாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இசைப் பங்களிப்பு, திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும்.

தேவா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com