வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
Published on

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

திட்ட பணிகள்

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் தண்டபாணி நேரில் ஆய்வு செய்தார்.

தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகளையும் அவர் பார்வையிட்டார். முதல்வரின் கிராம சாலை திட்டத்தில் சுப்பிரமணியபுரம் மற்றும் குண்டாயிருப்பில் போடப்பட்டு வரும் சாலைபணிகள், அலமேலுமங்கை புரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிட பணிகளையும், சத்துணவு மையத்தில் உணவு தரமாக இருக்கிறதா என்பதையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அகதிகள் முகாம்

மடத்துப்பட்டி ஊருணியில் நடைபெற்று வரும் பணிகள், கொங்கன்குளத்தில் சுகாதார திட்டப்பணிகள் மூலம் நடைபெற்று வரும் சுகாதார வளாகத்தையும் பார்வையிட்டார். துலுக்கன்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 232 அகதிகள் முகாம் குடியிருப்புக்கு கட்டிட பணிகளை பார்வையிட்டு பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்குமாறு ஒப்பந்தக்காரரிடம் கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது ஆணையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com