வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும்

வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும்
Published on

கும்பகோணம்:

வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

மாநகராட்சி கூட்டம்

கும்பகோணம் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இ்தில் 48 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-

ஆதிலட்சுமி(அ.தி.மு.க.): பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் உரிய முறையில் மதிப்பீடுகள் தயார் செய்து வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் வரிப்பணம் வீணாகாது

துணைமேயர்: மக்களின் வரிப்பணத்தின் மீது மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே எந்த வகையிலும் மக்களின் வரிப்பணம் வீணாகாது.

பத்மகுமரேசன்(அ.தி.மு.க.): தாராசுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதுகுறித்து கேட்டபோது மின் விளக்குகளை மாற்றி அமைக்க தேவையான பொருட்கள் கையிருப்பில் இல்லை என தெரிவிக்கின்றனர். சில நாட்களாக தாராசுரம் பகுதியில் குடிநீர் வரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி ஆணையர்: இவைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓரிரு நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும்.

குட்டி தட்சிணாமூர்த்தி(தி.மு.க.): மக்களின் வரிப்பணம் எந்த வகையிலும் வீணாகாமல் பாதுகாப்பான முறையில் தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசும் இந்த மன்றமும் கவனமுடன் செயல்படும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com