வால்பாறையில் வளர்ச்சிப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்-நகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் தகவல்

வால்பாறையில் வளர்ச்சிப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் தெரிவித்தார்.
வால்பாறையில் வளர்ச்சிப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்-நகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் தகவல்
Published on

வால்பாறை

வால்பாறையில் வளர்ச்சிப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் தெரிவித்தார்.

நகராட்சி கூட்டம்

வால்பாறை நகராட்சி மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பெர்ப்பெற்றிடெரன்ஸ்லியோன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே காரசார விவாதம் நடந்தது.

கவுன்சிலர் செல்வக்குமார்:- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ச்சி பணிகள் ஏதும் முழுமையாக நடைபெறவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு தேவையான பராமரிப்பு பணிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

கனகமணி: வார்டு பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து வரும் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்.

வீரமணி:- வார்டு பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றுவரக்கூடிய அளவிற்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிதண்ணீர் தொட்டிகள் பராமரிப்பு பணி செய்ய வேண்டும்.வார்டு பகுதிக்கு 30 தெருவிளக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவிதா:- பள்ளிக்கூடங்களுக்கு சுற்று சுவர் கட்டித்தர வும், மழை நீர் வடிகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உமாமகேஸ்வரி:- வார்டு பகுதியில் உள்ள குடிதண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உபாசி சாலையை சீரமைக்க வேண்டும்.

வளர்ச்சி பணிகள்

ஆணையாளர் கூறியதாவது:- நகராட்சி மூலமாக மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஒருசில பணிகள் அரசின் திட்டங்கள் மூலம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல பணிகள் நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. தெருவிளக்கு பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பள்ளிகளாக மாற்றப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com