ரூ.20½ லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

ரூ.20½ லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
Published on

ஓசூர்:-

ஓசூர் தொகுதியில் ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

அமைச்சர் காந்தி

ஓசூர் ஒன்றியம் பாகலூர் ஊராட்சி அலுவலகத்தில் பாகலூர், பெலத்தூர், பாலிகானபள்ளி உள்ளிட்ட 32 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

வளர்ச்சி பணிகள்

பின்னர் அமைச்சர் காந்தி, ஓசூர் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை அமைக்கும் பணி, ரூ.6 லட்சம் மதிப்பில் கொல்லப்பேட்டையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி,

ரூ.4 லட்சத்தில் பஜனை மந்திய வீதி சாய்பாபா கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை ரூ.3 லட்சத்தில் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.20 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, துணைத்தலைவர் நாராயணசாமி, பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com