ரூ.32¼ லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

சோளிங்கர் ஒன்றியத்தில் ரூ.32¼ லட்சத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
ரூ.32¼ லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
Published on

சோளிங்கர் ஒன்றியம் சோமசமுத்திரம், வெங்குப்பட்டு, கெங்காபுரம், ஐப்பேடு, பாண்டியநல்லூர் ஆகிய பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் காலாய், மூன்று அரசு பள்ளிகளில் கழிவறை, மூன்று குளங்கள் சீரமைப்பு ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சோளிங்கர் ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பணிகளை குறித்த காலத்தில், விரைந்து முடிக்க வேண்டும், கட்டுமான பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் குளங்களுக்கு வரும் நீர் வரத்து மற்றும் தண்ணீர் வெளியேறும் வழி முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி பெருமாள், ஐபேடு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார், வெங்குப்பட்டு ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com